வால்மீகி அறம்
வால்மீகி அறம், நல்லி குப்புசாமி ரெட்டியார், பிரய்ன் பேங்க் பப்ளிகேஷன், விலை 395ரூ.

வியாசர் அறம் என்ற நூல் மூலம் மகாபாரதத்தைத்தந்த தொழில் அதிபர் நல்லி குப்புசாமி ரெட்டியார். அவர் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் உள்ள கதைகள் கூறும் அறம் என்ன என்பதை இந்த நூலில் கொடுத்து இருக்கிறார். இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஓர் அறவுரையும், அதனைத் தொடர்ந்து ராமாயணக் கதைகளும் நீதிகளும் சொல்லும் அறமும், அந்த அறத்தை சமீபகால நடப்புகளுடன் ஒப்பிட்டு, அதன் மூலம் நாம் பெற வேண்டிய பாடம் என்ன என்பதையும் எளிய முறையில் சொல்லி இருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் பொருத்தமான திருக்குறள், மற்றும் வால்மீகி பற்றிய அறிமுகம், ராமன் வாழ்ந்த காலம் பற்றிய குறிப்பு, ராமனின் வம்சவரலாறு, அந்தகால இந்தியாவில் இருந்த 56 தேசங்களின் பட்டியல் ஆகியவற்றையும் கொடுத்து இருப்பது அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 29/11/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030802_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818