வழிகாட்டும் விவேக சிந்தாமணி
வழிகாட்டும் விவேக சிந்தாமணி, நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க், பக்.112, விலை ரூ. 100.
விவேக சிந்தாமணி இரு பாகங்கள் கொண்டது. அதில் இடம்பெறும் செய்யுள்களின் எண்ணிக்கை 245. அதில் 98 செய்யுள்களைத் தேர்ந்தெடுத்து நூலாசிரியர் விளக்க உரை அளித்திருக்கிறார்.
“விவேகம்’ என்றால் நல்லது எது கெட்டது எதுவென்று பகுத்துணரும் அறிவு. “சிந்தாமணி’ என்றால் ரத்தினக்கல் – விலைமதிப்பற்றது என்று விளக்கமும் கூறுகிறார் நூலாசிரியர்.
“கூடா நட்பு’ , “அற்பரின் நட்பு கூடாது’,
“வேண்டாம் நட்பு’, “நட்பின் உயர்வு’, “சான்றோர் நட்பு’- இவையெல்லாம் நட்பு குறித்து இந்நூலில் இடம் பெற்றுள்ள செய்யுள்களுக்கான விளக்க உரைகள். இதுபோன்று பெண்ணின் பெருமை, கல்வி, மூடர் இயல்பு, அன்பு, கல்வி, மகனின் தன்மை, வறுமை, அழகு, இன்பம், துன்பம் என்பன போன்ற விஷயங்கள் தொடர்பான பலவிதமான செய்யுள்களுக்கான விளக்கங்கள், நூலாசிரியரின் அனுபவம் சார்ந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
எந்தவொரு கருத்தையும் மிக எளியமுறையில் சொல்லும் நூலாசிரியரின் திறன் வியக்க வைக்கிறது. உதாரணமாக, “யார் மூடன்’ என்ற செய்யுளுக்கு ஞானம் தரும் நூலைக் கற்காதவன், எந்த வேலையையும் செய்யாதவன், பெரியவர்கள் முன்பு பேசத் தெரியாதவன், பசியோடு இருப்பவனுக்கு உணவு தராதவன் என்று விளக்கம் தருகிறார்.
சில செய்யுள்களுக்கு விடுகதை போலவும், பழமொழி போலவும் விளக்கம் அளித்துள்ள நூலாசிரியர், செய்யுள்களின் அமைப்பு அப்படி என்றும் கூறுகிறார். அதுமட்டுமின்றி பல செய்யுள்கள் ஒரே கருத்தை வெவ்வேறு வகையான அணுகுமுறைகளுடன் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன, செய்யுளின் அமைப்பு என்று நூலாசிரியர் குறிப்பிட்ட போதிலும் பெரும்பாலும் இன்றைக்கும் பொருந்தும்படியான செய்யுள்களை மட்டுமே தேர்ந்தெடுத்து விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமணி, 20/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818