வெற்றி என் கைகளிலே

வெற்றி என் கைகளிலே, ஹெரால்ட் ரஸ்ஸல்; தமிழில்: அப்துற்-றஹீம், யுனிவர்ஸல்பப்ளிஷர்ஸ், பக்.128, விலை  ரூ.100.

ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான ஹெரால்ட் ரஸ்ஸல் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிய கதையை தன்வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதினார். 1954-இல் அப்துற்-றஹீம் வெளியிட்ட அதன் தமிழாக்கம் 67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

தனது கைகளை இழந்தஹெரால்ட் ரஸ்ஸல் அதற்காகத் தளர்ந்துவிடாமல், தனது மனதை எவ்வாறு பக்குவப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறினார் என்பதை இந்த நூல் விளக்குகிறது.

“தனக்கு ஏற்படும் தடைகள், தோல்விகள், குறைகள் ஆகியவற்றையெல்லாம் ஒருவன் வெற்றி கொள்ள வேண்டும்; இல்லையேல் மடிந்தொழிய வேண்டும் என்பதை நம்மில் ஒவ்வொருவரும் உணர வேண்டியது இன்றியமையாததாகும். மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எந்தவிதமான விதிமுறைகளும் கிடையாது. ஆனால் அதற்கு எளிதான பொன்மொழி ஒன்று உள்ளது. அது என்னவென்றால், “நீ இழந்து விட்டது முக்கியமானதன்று; உன்னிடம் எஞ்சியுள்ளதுதான் முக்கியமானது’ என்பதுதான்’.

ஹெரால்ட் ரஸ்ஸலின் இந்த வார்த்தைகள் இழந்ததைப் பற்றி எப்போதும் கவலைப்படாமல் வெற்றிக்கான அடுத்த அடியை தைரியமாக எடுத்து வைக்க வலியுறுத்துகிறது.

இந்த நூல் துயரமான நேரங்களில் நமது மனதைக் கவ்வும் எதிர்மறையான சிந்தனைகளைத் துரத்தி, இலக்கை நோக்கி நடைபோட உதவும் ஒரு படிக்கல்லாக இருக்கிறது.

நன்றி: தினமணி, 6/12/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *