காமராஜ் எனும் தமிழ் ஆளுமை
காமராஜ் எனும் தமிழ் ஆளுமை, வை.ஜவஹர் ஆறுமுகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ.
கர்மவீரர் காமராஜரின் ஆளுமைகளை இந்த நூல் புதிய கோணத்தில் தந்து இருக்கிறது. காமராஜரின் சுற்றுப் பயணத்தில் அவருடன் பல ஆண்டுகள் கலந்துகொண்ட இந்த நூலின் ஆசிரியர், அந்தப் பயணங்களின் போது வெளியான காமராஜரின் வியப்பான குணநலன்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறார்.
பத்திரிகைகளை காமராஜர் எந்த அளவுக்கு மதித்தார் என்பது, கடைநிலை ஊழியரின் குறையைக் கேட்டதும், அதற்குத் தீர்வு காணும் வகையில் அரசு ஆணையை மாற்றி அமைத்தது, விதிவிலக்கு கொடுத்து ஒரு கிராமத்துக்கு பள்ளிக்கூடம் கட்ட நடவடிக்கை எடுத்ததது போன்ற ஏராளமான மனதைத் தொடும் சம்பவங்கள், இன்றைய அரசியல்வாதிகள் படித்து நேர்மையான அரசியலுக்கு வழிவகுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக்கொடுக்கும் வகையில் தரப்பட்டு இருக்கின்றன.
நன்றி : தினத்தந்தி, 31/10/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031793_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818