மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்
மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், யாஸ்மின் பேகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ.
பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரை உள்பட பல்வேறு கருத்துக்ளையும் விழிப்புணர்வு அம்சங்களையும் கொண்ட கருவூலமாக இந்த நூல் அமைந்து இருக்கிறது.
மணிப்பூரில் பெண்கள் மட்டுமே இயக்கும் ஆச்சரியமான மார்க்கெட், இந்திய தேசிய கீதம் பிறந்த கதை, கோகோ மற்றும் சாக்லெட் அறிமுகமானது எப்படி என்ற விவரம், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பற்றி வெளிவராத செய்திகள், அலையாத்திக் காடுகளின் அருமை போன்ற கட்டுரைகளை, வசனகர்த்தா மற்றும் படத் தயாரிப்பாளராகத் திகழ்ந்த தூயவனின் மகள், இந்த நூலில் சுவாரசியமாகவும் சிந்தனையைத் தூண்டும் வகையிலும் படைத்து இருக்கிறார்.
நன்றி : தினத்தந்தி, 19/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818