நெடுமரங்களாய் வாழ்தல்
நெடுமரங்களாய் வாழ்தல், ஆழியாள், அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.70.
ஆறாத பெருவலி
இந்தியப் பெருங்கடலில் முலைப்பால் துளியாய்ச் சொட்டி நிற்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்டு, பசிபிக் சமுத்திரத்தில் முதிய ஆமைபோல் மிதக்கும் ஆஸ்ரேலியப் பெருந்தீவுக்குத் தன்னைக் கடத்திக் கொண்டவர்களின் ஆறாத பெருவலியைச் சொல்கிறது ஆழியாளின் இந்தத் தொகுப்பு.
இதிலிருக்கும் கவிதைகள் ஒரு தலைமுறையின் நெடுந்துயரை, வாழ்வின் இருண்மைகளை, கனவின் அதீதத்தைக் காட்சிப்படுத்துகின்றன. எளிய சொற்களின் ஒளிர்தலில் உயிர்ப்பைக் கண்டடைதலும் இனப்பேரழிவின் எச்சத்தில் மூச்செடுக்கும் மொழியுடலும்தான் ஆழியாளின் கவிதைகள்.
நன்றி: தமிழ் இந்து,.2/3/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818