நெடுமரங்களாய் வாழ்தல்

நெடுமரங்களாய் வாழ்தல், ஆழியாள், அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.70. ஆறாத பெருவலி இந்தியப் பெருங்கடலில் முலைப்பால் துளியாய்ச் சொட்டி நிற்கும் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவில் போரால் பாதிக்கப்பட்டு, பசிபிக் சமுத்திரத்தில் முதிய ஆமைபோல் மிதக்கும் ஆஸ்ரேலியப் பெருந்தீவுக்குத் தன்னைக் கடத்திக் கொண்டவர்களின் ஆறாத பெருவலியைச் சொல்கிறது ஆழியாளின் இந்தத் தொகுப்பு. இதிலிருக்கும் கவிதைகள் ஒரு தலைமுறையின் நெடுந்துயரை, வாழ்வின் இருண்மைகளை, கனவின் அதீதத்தைக் காட்சிப்படுத்துகின்றன. எளிய சொற்களின் ஒளிர்தலில் உயிர்ப்பைக் கண்டடைதலும் இனப்பேரழிவின் எச்சத்தில் மூச்செடுக்கும் மொழியுடலும்தான் ஆழியாளின் கவிதைகள். நன்றி: தமிழ் […]

Read more

குறுக்கு வெட்டு

குறுக்கு வெட்டு, சிவகாமி, அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை 170ரூ. திருமண உறவு கடந்த காதல், சாகசமா துரோகமா அல்லது ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், போதாமைகள், சலிப்புகள், திருப்தியின்மை, பழித்தீர்ப்பு, சவால்கள் போன்றவற்றின் புறவிளைவா? அது வாழ்வின் தென்றலா, புயலா? மரண விழைவா, உயிர்த்தல் விழைவா? உணர்வுக்கும் அறிவுக்குமான போராட்டத்தை உடலரசியல், பாலரசியல் ஆகிய இரு கத்திகளின் மீது மொழியை நடக்க விட்டிருக்கிறார் சிவகாமி. தீக்குச்சிக்கும் மருந்துப்பட்டைக்குமிடையில் உறைந்திருக்கும் அமைதியான நடிப்பை உரையாடல்களால் உரசி மூட்டுகிறது இந்நாவல். பேசப்படாத கதைக்களத்தைப் பெண் மொழியில் பேசுகிறது. நன்றி: […]

Read more