சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள்
சமுதாயத்தின் முன் நிற்கும் சவால்கள், மா.கருணாநிதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 180ரூ.

மூன்று முன்னாள் முதல்வர்களின் ஆட்சிக் காலத்தில் 37 ஆண்டுகள் பணியாற்றிய காவல்துறை முன்னாள் கண்காணிப்பாளரான இந்த நூலின் ஆசிரியர், சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கருத்தகளை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார்.
பணியின்போது தனக்குக் கிடைத்த அனுபவங்கள், மற்றும் அன்றாட வாழ்வை உற்றுநோக்கி அதன்மூலம் கிடைத்த உணர்வுகள் ஆகிய பயனுள்ள தகவல்களை 29 கட்டுரைகள் வாயிலாகத் தந்து இருக்கிறார்.
பதவி என்பது அனுபவிக்க அல்ல, சுமப்பதற்கு. தற்கொலைகள் ஆத்திரத்தில் எடுக்கும் அவசர முடிவு. ஊழல் அரசியல்வாதிகளால், அதிகாரிகள் சந்திக்கும் அவமானம் போன்றவை உள்பட அனைத்துக் கட்டுரைகளும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
நன்றி: தினத்தந்தி,5/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031621_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818