அறவாணரின் கீழ்க்கணக்கு உரை சிறப்பியல்புகள்
அறவாணரின் கீழ்க்கணக்கு உரை சிறப்பியல்புகள், இனம் பதிப்பகம், பக் 208, விலை ரூ.200,
பதினெண்கீழ்க்கணக்கு க.ப.அறவாணன் எழுதிய உரைத்திறம் எத்தகையது என்பதை அறிவதற்தென்றே ஓர் ஆய்வரங்கத்தை நடத்தி, கட்டுரை உருவாக்கத்துக்கான நெறிமுறைகளைப் பேராளர்களுக்கு அனுப்பி, அறவாணரின் உரை சிறப்பியல்புகள் பெறப்பட்டன என்று இந்நூல் உருவான விவரத்தை முன்னுரை தெளிவாக்குகிறது.
அந்த வகையில், க.ப.அறவாணன் உரை நூல்களில் கையாண்டுள்ள சொல், தொடருக்கான பொருள் பொருத்தப்பாட்டை உரிய சான்றுகளுடன் சுட்டிக் காட்டுவது; ஒவ்வொரு பாடலுக்கும் அவர் கொடுத்துள்ள தலைப்பின் பொருத்தத்தை விளக்குவது, கட்டமைப்பு நோக்கில் அவரது மொழியாளுமைகளை (சொல், தொடர்) மதிப்பிடுவது, நூல் முன்னுரை, அவரது இயக்கச் சார்பை அடையாளப்படுத்துவது ஆகிய நெறிமுறைக்கு உட்பட்டு பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினெட்டு நூல்களுக்குமான உரை சிறப்பியல்கள் பதினெட்டு பேரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
அறவாணரின் உரையின் உள்ளடக்கம், உரை இயல்பு, நூற் குறிப்புகள் பற்றிய விவாதம், சந்தி பிரித்துத் தருதல், மூலமும் உரையும், பண்பாட்டுக் குறிப்புகள் இடம்பெறல், காலக் கணிப்பு, மேற்கோள், பதசாரம், மொழியியல் அணுகுமுறை, குறிப்புப் பொருள்கள், பாடல்களுக்குக் கூடுதல் விளக்கம் அளித்தல், கருத்து அடைவு, பாடலுக்குத் தொடர்புடைய செய்திகளைத் தருதல், சமயப் பொதுமை என – க.ப.அறவாணனின் உரைச் சிறப்பியல்புகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஆராய்ந்திருக்கின்றன.
நன்றி: தினமணி, 18/4/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818