ஆதித்ய இருதயம் விரிவுரை
ஆதித்ய இருதயம் விரிவுரை, க.அரங்கநாதன், ஸ்ரீ அரங்கன் நிலையம், விலை 400ரூ.
ராமாயண காவியத்தில், ராவணனுடன் ராமர் போருக்கு ஆயத்தமாக இருக்கும் காலத்தில், ராமருக்கு சூரிய வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கி அகத்திய முனிவர் அருளிய மந்திரங்களான ஆதித்ய இருதயத்தில் கூறப்பட்டுள்ள அற்புதமான விஷயங்களை இந்த நூல் விளக்கமாகவும் எளிய முறையிலும் தந்து இருக்கிறது.
அனைத்து தெய்வங்களின் அம்சங்களையும் பெற்றுக்கொண்டு அவற்றை மக்களுக்கு வழங்கும் சூரிய பகவான் செய்லபாடுகளை உணர்வு பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஆசிரியர் இந்த நூலில் விளக்கி இருக்கிறார்.
ஆதித்ய இருதயத்தில் உள்ள மந்திரங்களை நாளும் மும்முறை ஓதினால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதையும் ஆசிரியர் உறுதிபடக் கூறி இருக்கிறார். தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், அவ்வையார், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் கருத்துக்களை ஆதித்ய இருதய மந்திரங்களுடன் ஒப்பிட்டுக் கூறி இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி, 9/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818