ஆங்கில ஆசான்
ஆங்கில ஆசான், நலங்கிள்ளி, கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.600
துணை வினைகளில் எதை, எங்கே பயன்படுத்த வேண்டும் என்பது ஆங்கிலத்தில் கரைகண்டுவிட்டதாகப் பெயர்பெற்றவர்களே தடுமாறும் இடம். குறிப்பாக can-could, may-might, will-would-shall, போன்ற சொற்களெல்லாம் ஒரே பொருளில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் நடைமுறை இருந்துவருகிறது.
இவற்றில் சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. இந்த ஒவ்வொரு சொல்லுக்கும் தனிப் பயன்பாடுகளும் இருக்கின்றன. காலத்தைப் பொறுத்தும் நாம் யாரிடம் பேசுகிறோம் என்பதைப் பொறுத்தும் இந்தச் சொற்களின் பயன்பாடு மாறும். இவை ஒவ்வொன்றும் எளிய உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நூலைப் படித்த பிறகு, காபி சாப்பிடப் போகலாமா என்று மேலதிகாரியிடம் கேட்பதற்கும், அதே கேள்வியை நண்பரிடம் கேட்பதற்கும் ஆங்கிலத்தில் எப்படி வெவ்வேறு வகையான வாக்கியங்களை அமைப்பது என்பது போன்ற விஷயங்களில் தெளிவு கிடைக்கும்.
பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கும் ‘பயிற்சி வினாக்கள்’, ‘அன்றாட உரையாடல்கள்’ ஆகிய பகுதிகள் அன்றாடப் பேச்சுக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்தப் பெரிதும் உதவுபவை. ஆயிரம் வினாக்களும் 15 உரையாடல் சூழல்களும் கொடுக்கப்பட்டிருப்பது எதையும் விரிவாகவும் விளக்கமாகவும் அனைத்து சாத்தியங்களையும் உள்ளடக்கும் விதமாகவும் கொடுக்கும் ஆசிரியரின் உந்துதலுக்குச் சான்றாகிறது.
சில இடங்களில் உதாரணங்கள், விளக்கங்களைக் கொடுத்துவிட்டு இணையதளங்கள் மூலம் அவற்றில் மேலதிகப் பயிற்சிகளைப் பெறலாம் என்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். ‘இந்த நூலை வாங்கிவிட்டால் நீங்கள் ஆங்கிலத்தில் ஈடு இணையற்ற நிபுணர் ஆகிவிடலாம்’ என்றெல்லாம் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசாமல், எதையும் மேலும் கற்பதற்கான இடம் இருப்பதைக் குறிப்பிட்டு அதற்கான வழிகளைச் சொல்வதிலும் அக்கறை செலுத்தியிருப்பது இந்த நூலின் நோக்கத்துக்கு அணி சேர்க்கிறது.
தமிழ்வழி ஆங்கிலம் பயில விரும்புபவர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய மிகச் சிறந்த கையேடு இது!
– எஸ்.கோபாலகிருஷ்ணன்,
நன்றி: தமிழ் இந்து, 17/8/19
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789384149796.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818