ஆன்மீகம் தெய்வீகம்
ஆன்மீகம் தெய்வீகம் , சத்யவதனா, சத்யா பதிப்பகம், பக்.236, விலை ரூ.300.
“பிரதோஷத்தின் பலன்கள்’,”ஐந்தெழுத்து மந்திர ஆற்றல்’, “கடவுளைக் காண்பது எப்படி?’, “ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயரின் பெருமை’ என்பன உள்ளிட்ட 52 தலைப்புகளில் எழுதப்பட்ட ஆன்மிக கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
திருக்கோயில்கள், தரிசனங்கள், வழிபாட்டு முறைகள் குறித்த அபூர்வ தகவல்களை நூலாசிரியர் இந்நூலில் வாரி வழங்கியிருக்கிறார்.
போகருக்கே ஞானம் வழங்கிய புலிப்பாணிச் சித்தரின் வரலாறு வியப்பூட்டுகிறது.
“ஒருவன் தீய எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தால், அதை உண்டவனின் ரத்தத்திலும் தீய எண்ணம் கலந்து விடும். நான் துரியோதனன் இட்ட உணவை உண்டதால், எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டுவிட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது, எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்!’ என்று பீஷ்மர், பாண்டவர்களுக்கு அளிக்கும் விளக்கம் சிந்தனைக்குரியது.
கி.மு.482-இல் ஆதிசங்கரர் தொடங்கி, ஏறத்தாழ 2500 ஆண்டுகளில் 70 பீடாதிபதிகளைக் கண்ட காஞ்சி காமகோடி பீடத்தின் வரலாற்றுப் பட்டியலை இந்நூலில் இணைத்திருப்பது சிறப்பு; படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.
நன்றி: தினமணி, 6/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818