ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை
ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகள் காட்டும் தமிழரின் தொன்மை, கோ.உத்திராடம், நாம் தமிழர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.150.
இந்நூலில் வெளிவந்த பெரும்பாலான கட்டுரைகள் தினமணியில் (தமிழ்மணி) வெளி வந்தவை.
ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அகழாய்வில் கிடைத்த தொல் பொருள்கள், முதுமக்கள் தாழி, கட்டடங்கள், உறை கிணறுகள், தொன்மை எழுத்துகள் ஆகியவை பண்டையத் தமிழர்கள் நகர, நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கு முக்கியச் சான்றாதாரங்களாக உள்ளன என்று கூறும் நூலாசிரியர், அவற்றுடன் தொடர்புடைய இலக்கியங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும், கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி, சுவர் ஓவியங்களில் காணப்படும் மக்களின் வாழ்வியல் முறை, இயல், இசை, நாடகம் குறித்த பதிவுகள், பண்ட மாற்று முறை, மன்னர்களின் ஆட்சி முறை, அவர்கள் வழங்கிய கொடை, நீர் மேலாண்மை, நில ஆவணங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
பல அகழாய்வுகளின் அறிக்கைகளும், ஆய்வு முடிவுகளும் நூல் வடிவம் பெறாமல் கோப்புகளில் உறங்கிக் கிடப்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டியிருப்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமணி, 23/4/2018.