ஜோதிடவியல்- முதற்பாகம்
ஜோதிடவியல்- முதற்பாகம், கே.கே.பாலேந்தர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஜோதிஷ குருகுலம், பக்.304, விலைரூ.400.
ஜோதிடத்தை முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக படைக்கப்பட்ட நூல் இது.
இந்நூலில் முதலில் பஞ்சாங்கம் பாலபாடமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுகளின் பிரிவுகள், அயனங்கள், ருதுக்கள், மாதங்கள், திதி, நட்சத்திரங்கள், நட்சத்திரங்களின் தன்மைகள் மற்றும் பாதங்கள், ராசி மண்டலம், கரணங்கள், யோகங்கள், ஹோரை, நவக்கிரகங்கள், ராசிகளின் தன்மைகள், தொழில்கள், கிரங்களின் தன்மைகள், காரகத்துவங்கள் அனைத்தையும் சிறப்பாக எளிதாகப் புரியும்படி விளக்கியுள்ளார் ஆசிரியர்.
இவற்றை பாலபாடமாகக் கற்பித்த பின்னர், லக்னத்தை பற்றியும் லக்னத்தை கணிக்கும் விதம், லக்னத்திற்கும் ராசிக்கும் உள்ள வேறுபாடுகள் அவற்றின் பயன்கள் விளக்கப்பட்டுள்ளன. 12 பாவகங்கள், பாவகங்களின் காரகத்துவங்கள், அதன் பாவகாதிபதிகள், அவர்களின் காரகத்துவங்கள், பாவகங்களில் கிரகங்கள் நிற்பதால் உண்டாகும் பலன்கள் கூறப்பட்டுள்ளன. லக்ன சுபர்கள் பாபர்களால் ஏற்படும் நன்மை, தீமைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. கேந்திரங்களில் கிரகங்கள், திரிகோணங்களில் கிரகங்கள், பணபரத்தில் கிரகங்கள், மறைவு ஸ்தானங்களில் கிரகங்கள், அவை தரும் பலன்கள் என்று படிப்பவர்களுக்கு எளிமையாய் புரியும்விதத்தில் எழுதியுள்ளார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 5/6/17.