அறம் வளர்த்த அருந்தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும்
அறம் வளர்த்த அருந்தமிழ்ப் புலவர்களும் புரவலர்களும், அரங்க பரமேஸ்வரி, மங்கை வெளியீடு, பக்.320, விலை ரூ.240.
அக்காலத்தில் வாழ்ந்த கல்வியிற் சிறந்த புலவர்கள் மட்டுமல்லாமல், அரசரர்கள், சிற்றரசர்கள், பல்வேறு நிலையில் வாழ்ந்த குடிமக்கள், கலைஞர்கள், வணிகர்கள் எனப் பலரும் தமிழில் புலமைப் பெற்றிருந்ததுடன், பாடல்கள் புனையும் ஆற்றலும் கைவரப் பெற்றிருந்தனர் என்பதை சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றில் மிக சிறந்ததாகக் கூறப்படும் கொடைப் பண்பு உடையவர்களையே அக்காலச் சமுதாயம் புரவலர்கள் என்று போற்றியுள்ளது.
தமது ‘பா’த் திறத்தால், புலவர்கள் பலர் அறப்பாடல்களைப் பாடியதுடன், அக்கால மன்னர்களின் தனித்தன்மை, கொடைச் சிறப்பு, பண்பு நலன்கள் போன்றவற்றையும் பாடிச் சிறப்பித்தனர். அவ்வாறு பாடிய புலவர்களைக் காத்துப் புரவலர்களாகி மன்னர்களும் போற்றியுள்ளனர். என்றாலும், புலவர்கள் தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள மட்டுமே அரசர்களை நாடிச் செல்லவில்லை. அதையும் தாண்டி, சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக வீர மன்னர்களைப் புகழ்ந்தும், தக்க சமயத்தில் அறிவுரை கூறியும், வீரமற்றோரை இகழ்ந்தும், இடித்துரைத்தும், அவர்களை அறவழியில் செலுத்தியும், உலகியல் உண்மைகளை எடுத்துரைத்தும் நல்வழிப்படுத்தியுள்ளனர் என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கிறது.”
நன்றி: தினமணி, 6/1/2020
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818