கஸ்டமர் சைக்காலஜி
கஸ்டமர் சைக்காலஜி, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், பக்.152; விலை ரூ.170.
வாடிக்கையாளர் உளவியலை அறிவதன் மூலம் அவரை வசப்படுத்தி நமது தொழிலை எப்படி அபிவிருத்தி செய்துகொள்ளலாம் என்பது இந்நூலில் விவரிக்கப்படுகிறது.
வாடிக்கையாளருக்குத் தேவை இருந்தால் மட்டுமே பொருளை வாங்குவார். அவரை வசப்படுத்தி அதை வாங்கச் செய்துவிட முடியாது. ஆனால் தேவையை உணரச் செய்வதுதான் நல்ல வியாபார உத்தி. அதில்தான் உளவியலின் பங்களிப்பு வருகிறது. அடிப்படையான சில உளவியல் பாடங்களைக் கற்றுக் கொண்டால் போதும், வாடிக்கையாளர்கள் உங்கள் உள்ளங்கையில் அடங்கிவிடுவார்கள் என அழுத்திச் சொல்கிறார்.
வாடிக்கையாளரைக் கவரும் பல உத்திகளை அவர் அலசுகிறார். தங்களுக்கு எந்த விதமான பொருள் அல்லது சேவை தேவைப்படுகிறது என்று வாடிக்கையாளருக்கு எப்போதுமே தெரிந்திருப்பதில்லை. ஆனால் சந்தையில் நிலவும் ஓர் இடைவெளியை – ஒரு தேவையை ஒரு தொழில்முனைவோர் அல்லது சந்தையாளர் உணர்ந்து தனது வேலையில் இறங்க வேண்டும் என்கிற நூலாசிரியர், வாடிக்கையாளரின் ஆர்வத்தைத் தூண்டும் சில உத்திகளைக் குறித்து எப்படியெல்லாம் யோசிக்கலாம் என்றும் சொல்லித் தருகிறார்.
நீங்கள் ஒரு புதிய தொழில்முனைவோரா? அல்லது வாடிக்கையாளர்களுடன் நேரடியான தொடர்பில் ஈடுபடும்விதமாகப் புதிதாக ஏதேனும் தொழில் செய்யும் ஆலோசனையில் இருக்கிறீர்களா? உங்களுக்கு இந்நூல் நிச்சயமாக உதவக் கூடும்.
நன்றி: தினமணி, 22/3/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/9788194932147_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818