இசை எனும் நீர்
இசை எனும் நீர், நினைவின் ஆழியில் அலையும் கயல்கள், ரவிசுப்பிரமணியன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.150
நல்லவற்றை அடையாளம் காணுதல் ஒரு கலை. தனக்கானதைக் கண்டடைந்து, அதைத் தன்னுணர்வாக மாற்றி பாடுபொருளின் பன்முகத்தன்மையை நம் பயணிப்புக்கு ஏதுவாக மாற்றம்கொள்ளவும் செய்திடுகிறார் கவிஞர் ரவிசுப்பிரமணியன். அன்றாடங்களில் நிகழும் சம்பவங்களில் கவிதைக்கான விதையைத் தேர்வுசெய்தல், திறம்பட மொழியில் பிணைத்தல், இசை எனும் நீரால் ஈரப்படுத்துதல் எனும் தொடர் செயல்பாடுகளால் தன் படைப்புகளுக்கு முழுமை தருகிறார் ரவிசுப்பிரமணியன். இயல்பில் அவர் பாடகராக இருப்பது அவரின் கவிதைகளுக்குக் கூடுதல் பலமாக இருப்பதை வாசிப்பில் உணர முடிகிறது. ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ கவிதைத் தொகுப்பு இதற்கு மேலும் ஒரு சான்றாக இருக்கிறது.
– ந.பெரியசாமி.
நன்றி: தமிழ் இந்து, 21/11/2020
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818