க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ச. கந்தசாமி, சாகித்திய அகாடெமி, விலை 200ரூ.
க.நா.சுப்ரமண்யத்தை விமர்சகராகவும் நாவலாசிரியராகவுமே பரவலாக அறிந்திருக்கிறோம். க.நா.சு.வின் சிறுகதை சாதனைகளை வாசிக்கத் தோதாக அவரது 24 சிறுகதைகளை ச.கந்தசாமி தொகுத்திருக்கிறார். க.நா.சு. ஒரு காலகட்டத்தில் இருந்த விழுமியங்களின் பிரதிநிதி.
அவர் தன் காலத்தின் குரலாக அவர் வாழ்ந்த சூழ்நிலையையே சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். ஆழ்மன வேட்கையை, அக்காலகட்டக் குடும்பநிலையை, இயல்பான வாழ்க்கையை அவரது சிறுகதைகளில் காணலாம்.
அவருடைய கதைகள் பெரும்பாலும் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு அதன் மீது கட்டப்பட்டவைதான். மனம் கொள்ளும் ஓட்டங்களை உளப்பகுப்பாய்வாளரின் இடைவெளியிலிருந்து பார்ப்பவை.
அதை எந்தப் பதைபதைப்புமின்றி மிக இயல்பாகச் சொல்லிச்செல்கிறார். மௌனத்தையும், சொல்லாமல் விடப்படும் தருணங்களையும், கற்பனையின் எல்லையற்ற சாத்தியங்களையும் க.நா.சு.வின் கதைகளில் காணலாம்.
சிறுகதைகள் மூலம் வாழ்க்கையின் சிறு பரப்பைக் காண முயல்வதாகக் கூறுகிறார் க.நா.சு.; அது உண்மையும்கூட.
– இரா.சசிகலாதேவி
நன்றி: தமிழ் இந்து, 16/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818