கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)

கணையாழிக் கட்டுரைகள் (1995-2000), தொகுப்பாசிரியர் ம.ரா. க. முத்துக்கிருண்ன், ஜீவ கரிகாலன், கவிதா பதிப்பகம், பக். 352, விலை 260ரூ.

சிறுபத்திரிகை உலகில் தனக்கென தனி இடம் பிடித்த “கணையாழி‘’யில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

பழந்தமிழ், சமகால இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், தமிழ்த் திரைப்படங்கள், வெளிநாட்டுத் திரைப்படங்கள் பற்றிய அறிமுக, விமர்சனக் கட்டுரைகள், புதிய நாடக முயற்சிகள் பற்றிய கட்டுரைகள், படைப்பாளிகளின் இலக்கியம் சார்ந்த பதிவுகள், பழங்கால வரலாறு தொடர்பான கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் என பல திசைகளிலும் பயணிக்கின்றன இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள்.ஒரு சிற்றிதழின் விரிவான எல்லைகள் நம்மை வியக்க வைக்கின்றன.

அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கார்த்திகேசு சிவத்தம்பி, கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, சுஜாதா, தஞ்சை ப்ரகாஷ், தி.க.சி., தமிழ்நாடன், பிரபஞ்சன்,புதுமைப்பித்தன், மருதமுத்து, வெங்கட்சாமிநாதன், வண்ணநிலவன், வெளி ரங்கராஜன், வ.ந.கிரிதரன் உள்ளிட்ட தமிழின் முக்கிய ஆளுமைகளின் கட்டுரைகள் வாசகனை தமிழ் இலக்கிய, பண்பாட்டு, அறிவுவெளிக்கு அழைத்துச் செல்கின்றன. சிறந்த தொகுப்பு.

நன்றி: தினமணி, 16/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *