கர்ப்ப வித்யா

கர்ப்ப வித்யா, ஆண்டாள் பாஸ்கர், ஆண்டாள்ஸ் லக்ஷ்மி ஃபெர்டிலிட்டி ரிசர்ச், பக்.192, விலை ரூ.250.

குழந்தைகள் பிறந்தவுடன்தான் அவர்களுக்கு அறிவு, மனவளர்ச்சி ஏற்படும் என்பதில்லை, அவர்கள் கருவிலிருக்கும்போதே அவற்றைப் பெறுகிறார்கள் என்ற அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

வயிற்றில் உள்ள குழந்தையுடன் தாய் பேசுவதால், அது குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, கர்ப்பிணி பெண்ணின் உடல், மனம், புலன்கள், உணர்வுகள் ஆகிய நான்கையும் சமநிலையில் வைக்க முடியும் என்று கூறும் நூலாசிரியர், கருவிலிருக்கும் குழந்தையுடன் தாய் எவ்வாறு பேச வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.

கருவிலிருக்கும் குழந்தையுடன் பேசுவதால் தாயின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. கருத்தரித்திருக்கும் காலம் மகிழ்ச்சிகரமாக அமைகிறது. அது சுகப் பிரசவம் ஏற்பட வழி வகுக்கிறது.

குழந்தையின் மனநிலையை எண்ண ஓட்டங்களை கருவிலேயே மாற்றி அமைத்து, குழந்தையைச் சாதனையாளராக மாற்றி அமைக்க முடியும் என்கிறார் நூலாசிரியர்.

கருவுற்ற காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள், இசை கேட்பதால் ஏற்படும் நன்மைகள், தந்தையின் பங்களிப்புகள் பற்றியெல்லாம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தாய் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு எவ்விதம் உதவுகின்றன என்பதும் விளக்கப்பட்டுள்ளது. கருவுற்ற பெண்களின் கைகளில் மட்டுமல்ல, தாயான ஒவ்வொரு பெண்ணின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.

நன்றி: தினமணி, 26/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *