மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
மலர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தில், தமிழில் பா. இரவிக்குமார், ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150ரூ,
கொரியக் கவிதைகள்
உதிரும் இலைகளின் பாடல் என்ற சீன மொழிபெயர்ப்புக் கவிதை நூலின் மூலம் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகமானவர் ப. கல்பனா. அவரும் கவிஞர் பா.இரவிக்குமாரும் சேர்ந்து கொரியக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
பெரும்பாலான கவிதைகளின் தொனி மென்மையாகவும் சில கவிதைகள் வலியை உரக்கப் பேசுபவையாகவும் உள்ளன. இந்தக் கவிதைகளில் பனி திரும்பத் திரும்ப வருகிறது. நாம் அறியாத ஒரு நிலப்பரப்பை இந்தக் கவிதைகள் எளிய சொற்களின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவருகின்றன.
‘நினைவென்பது
வெற்று இருக்கையொன்றில் அமர்தல்
மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில் அமர்தல்’
என்ற வரிகள் தமிழில் எழுதப்பட்ட கவிதையைப் போலவே அவ்வளவு இயல்பாகவும் அழகாகவும் உள்ளன.
நன்றி: தமிழ் இந்து, 9/10/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818