மணிக்கொடி சினிமா
மணிக்கொடி சினிமா, கடற்கரய் மத்தவிலாச அங்கதம், பதிகம் பதிப்பகம், விலை: ரூ.125
‘மணிக்கொடி’ என்றவுடன் கு.சீனிவாசன், டி.எஸ்.சொக்கலிங்கம் என்று இதழியல் ஆளுமைகளும் வ.ரா., பி.எஸ்.ராமையா, புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி என்று இலக்கிய ஆளுமைகளும் நினைவுக்கு வருகிறார்கள். முப்பதுகளின் மத்தியில், வார இதழாகத் தொடங்கப்பட்டு பின்பு மாத இதழாக வெளிவந்த ‘மணிக்கொடி’ மொத்தம் ஆறாண்டுகளே வெளிவந்தது. தமிழில் பேசும் படம் வெளிவர ஆரம்பித்த காலகட்டம் அது.
இலக்கியத்துக்கு இணையாக இவ்விதழில் சினிமா செய்திகளும், விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன. பக்கங்கள் முழுவதும் சினிமா விளம்பரங்கள் விரவிக்கிடந்துள்ளன. அவற்றை விரிவாக விளக்கும் ‘மணிக்கொடியின் மறுமுகம்’ என்ற தலைப்பிலான கட்டுரையுடன், அவ்விதழில் வெளிவந்த சில சினிமா விமர்சனங்களும் புகைப்படங்களும் இந்நூலில் பிற்சேர்க்கையாக அளிக்கப்பட்டுள்ளன.
பி.எஸ்.ராமையாவின் ‘மணிக்கொடி நினைவோடைகள்’ அவருக்கு சினிமா மீதிருந்த ஆர்வத்தை எடுத்துச்சொல்கிறது. ‘மணிக்கொடி’யில் வெளிவந்த சினிமா விமர்சனங்களில் பெரும்பகுதி, ஸஞ்சயன் என்ற புனைபெயரில் அவர் எழுதியவையே. முப்பதுகளில் சினிமாவை மோகித்திருந்த தீவிர இலக்கியவாதிகள் ஐம்பதுகளுக்குப் பிறகு அதைப் பரிகசிக்கத் தொடங்கியதற்கு, தமிழ் சினிமாவை திராவிட இயக்கத்தவர்கள் கைப்பற்றிக்கொண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நன்றி: தமிழ் இந்து, 8/1/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031653_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818