மணிச்சித்திரத்தாழ்
மணிச்சித்திரத்தாழ், தாழை மதியவன்; தாழையான் பதிப்பகம், பக்.158; விலைரூ.150.
மாறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த இரு இணையர்கள்தான் இந்நாவலின் நாயகர்கள் மற்றும் நாயகியர். அவர்களது காதல், மண வாழ்க்கை, இல்லறம் குறித்த கதை என்றாலும், அதனுள்ளே இருவேறு மதங்களைப் பற்றிய சமூகக் கட்டமைப்புகளையும், அதனால் ஏற்படும் சவால்களையும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.
காதலின் ஊடே சமகால சமூகப் பிரச்னைகளை அலசும் வகையில் இந்நாவல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. பேரன்பாக ஒவ்வொருவரது ஆழ்மனதுக்குள்ளும் நிறைந்திருக்கும் காதல், பேராண்மையாக இந்த மானுடத்தை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் கருப்பொருள்.
அனுராதா என்னும் கலிமா, ராஜா முகம்மது, சாருமதி, காதற்கனி ஆகிய கதைமாந்தர்கள்தான் நாவலின் பிரதான பாத்திரங்கள். அவர்களது வாழ்க்கைப் பயணமும், அதன் வழியே நீளும் காட்சி அமைப்புகளும் விறுவிறுப்பான எழுத்து நடையில் பதிவாகியிருக்கின்றன. வெறுமனே கற்பனைக் கதையாக அல்லாமல் உண்மை நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூல் படைக்கப்பட்டிருப்பது வாசிப்புக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மணிச்சித்திரத்தாழ் அகத்தை திறக்கும் நாவல்.
நன்றி:தினமணி, 8/3/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031267_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818