மனிதனை இயக்குவது மனமா மூளையா?

மனிதனை இயக்குவது மனமா மூளையா?, டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி மோகன்; நலம்,  பக்.128; விலைரூ.125.

யோகாசனம், தியானம், பக்தி போன்றவை மனித மூளை, மனம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் மாறுதல்களை அறிவியல் அடிப்படையில் விளக்கும் நூல் இது. உதாரணமாக சிலவற்றைச் சொல்லலாம்.

‘கம்ப்யூட்டர் உதவியுடன் மனித மூளையின் ஒவ்வொரு பகுதியிலும் மின் அலை அளவுகளை உடனடியாகக் கணக்கிடலாம். அதன்மூலம், அவருக்கு ஏற்பட்டு இருக்கும் பிரச்னைகளையும் எளிதில் அறியலாம். ஒருவர் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது போல் இருக்கும்போது இந்த ஆல்ஃபா மின் அலைகள் ஏற்படுகின்றன. கண்களைத் திறந்து அவரது கவனம் திசை திரும்பும்போது, உடனே பீட்டா மின் அலைகள் தோன்றிவிடுகின்றன. ஆண்டாண்டு காலமாக முனிவர் முதல் ரமணர் வரை எல்லாரும் பழகச் சொன்ன தியானம்தான் இந்த ஆல்ஃபா நிலை 39’

‘ஓம் எனும் மந்திரம் உலகின் அனைத்து மந்திரங்களின் ஒலிகளையும் உள்ளடக்கியது. இதற்கு ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழுவில் சிலரை ’  ‘ஓம்’  எனும் ஒலியை ஒலிக்கச் செய்தார்கள். சிலரை ‘ஸ்ஸ்’ 39 என்று ஒலிக்கச் செய்தார்கள்.

இப்போது அவர்களுக்கு ஒரு சாதனம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டது. ‘ஸ்ஸ்&39’ எனும் ஒலி ஒலித்தவர்களின் மூளையில் எந்தவிதத் தாக்கமும் இல்லை. ஆனால் ‘ஓம்’39 என்று ஒலித்தவர்களின் மூளையில் அமைதிக்கான இடம் தூண்டப்பட்டிருந்தது அறியப்பட்டது.‘

நவீனயுகத்தில் அதற்குரிய கல்வி, தொழில் என வாழும் ஒருவர், ஆன்மீக பழக்க, வழக்கங்களைக் கடைப்பிடிப்பது அறிவியலுக்குப் புறம்பானதல்ல என்று நிறுவும் நூல்.

நன்றி: தினமணி, 10/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *