மினராவின் குரல்
மினராவின் குரல், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், விலை 260ரூ.
அல்லாமா இக்பாலின் கவிதைகள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்தவர். ஐம்பதுகளில் இஸ்லாமிய சிறுகதைகளின் பொற்காலத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்.
இஸ்லாமிய பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தவர் முதுபெரும் எழுத்தாளர் ‘மஹதி’. இவர் அண்மையில் மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் தந்தை ஆவார்.கான்சாகிப் (மருதநாயகம்) பற்றி தமிழில் வெளிவந்த முதல் நூல் இவருடையது.
இந்த நூலில் நபி பெருமானாரின் குடும்ப வாழ்வு, அருமறை நிகழ்த்திய அற்புதங்கள், சிறந்த முஸ்லிம் யார்? ரமலான் பெருநாள், குர்ஆனும் விஞ்ஞானமும், முஸ்லிம் மருத்துவ மேதைகள், முஸ்லிம் விஞ்ஞானிகள் என்பன போன்ற 46 கட்டுரைகள் அடங்கியுள்ளன.
இஸ்லாத்தின் பெருமைகளையும், முஸ்லிம்களின் சாதனைகளையும் விளக்கும் நூல் இது.
நன்றி: தினத்தந்தி.