முதியோர், போஸ்கோ மற்றும் வாடகைச் சட்டங்கள்

முதியோர், போஸ்கோ மற்றும் வாடகைச் சட்டங்கள், வெ.முருகன், சி.சீதாராமன் அண்டு கோ, மொத்த விலை: ரூ.365

உரிமைகள் அறிவோம்…

குற்றவியல் சட்டங்களைத் தீர்ப்பு விவரங்களுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட வழக்கறிஞர் வெ.முருகன், தொடர்ந்து முக்கியமான சட்டங்கள் பலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்துவருகிறார். முதிய குடிமக்களின் மற்றும் பெற்றோர்களின் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் 2007, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போஸ்கோ) 2012, தமிழ்நாடு நிலக்கிழார்களின் மற்றும் வாடகைதாரர்களின் உரிமைகளை மற்றும் பொறுப்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2017 ஆகியவை வெ.முருகனின் தமிழாக்க வரிசையில் சமீபத்திய வரவுகள். இயற்றப்பட்ட சட்டத்துடன் அதன் நடைமுறை விதிகளையும், அது தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு விவரங்களையும் இதுவரையிலான சட்டத் திருத்தங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார் வெ.முருகன்.

– புவி

நன்றி: தமிழ் இந்து,7/12/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.