முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்
முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன், ஆ.கலைச்செல்வன், தென்குமரிப் பதிப்பகம், விலை: ரூ.160,
ஈழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், தமிழகத்தின் கையறு நிலை உணர்வுகளை உலகுக்குச் சொல்லும் வகையில் உயிரை மாய்த்துக்கொண்டார் முத்துக்குமார். அந்த இளைஞரின் வாழ்க்கை வரலாற்றோடு அவரது கவிதை முயற்சிகள், பதினான்கு கோரிக்கைகளை உள்ளடக்கி ஒரு மரணசாசனமாக அமைந்துவிட்ட அவரது இறுதிக் கடிதம் ஆகியவற்றையும் ஒருசேரத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் ஆ.கலைச்செல்வன்.
இன, மொழிப் பற்றாளர்கள் உயிர்க்கொடையாளர் என்று முத்துக்குமாரின் நினைவுகளைப் போற்றுகிறார்கள். ஆனால், படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்ட ஒரு இளைஞரின் வாழ்க்கையும் மரணமும் நம்முன் எழுப்பிச் சென்றிருக்கும் கேள்விகள் எக்காலத்துக்கும் பதிலளிக்க முடியாதவை.
மொழிப் போர் காலகட்டம் தொடங்கி, அபிமானத்துக்குரிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிப்பது வரையில், உயிரையே ஒரு ஆயுதமாகப் பாவிக்கும் தமிழர்களின் உளப்பாங்கு இனிவரும் காலத்திலாவது முடிவுக்கு வர வேண்டும்.
நன்றி: தமிழ் இந்து, 19/6/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818