ஓமியோபதி ஆர்கனான், என் பார்வையில் தேடலும் புரிதலும்
ஓமியோபதி ஆர்கனான், என் பார்வையில் தேடலும் புரிதலும், கி.அம்பலவாணன், மனோரஞ்சிதம் பதிப்பகம், பக்.496, விலை ரூ.390.
ஹோமியோபதி மருத்துவத்தை உருவாக்கிய டாக்டர் சாமுவேல் ஹனிமன் எழுதிய ORGANON OF MEDICINE என்ற நூலின் தமிழாக்கமே இந்நூல்.
வரிக்கு வரி, எழுத்துக்கு எழுத்து நேரடியாக மொழிபெயர்ப்பது என்ற முறையில் இல்லாமல், நூலாசிரியர் தான் அந்நூலைப் புரிந்து கொண்டவிதத்தில் இருந்து பல விளக்கங்களுடன் இந்நூலைப் படைத்துள்ளார்.
நோய்க்கு மருந்தல்ல; நோயாளிக்கே மருந்து என்ற அடிப்படையில் நோயைக் குணப்படுத்தும் ஹோமியோபதி மருத்துவமுறையின் பல அடிப்படைகளை இந்நூல் விளக்குகிறது. 291 அடிப்படைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
நோயைக் கண்டறிதல், நோயாளியின் தன்மையைத் தெரிந்து கொள்ளுதல், நோய்க்கான மருந்துகளைத் தேர்ந்தெடுத்தல், மருந்துகளைக் கொடுக்கும் முறை, மருந்துகளைத் தருவது தவிர வேறு முறைகளில் சிகிச்சைகளைச் செய்யலாமா? உடனடி நோய்களுக்கும் நீண்ட கால நோய்களுக்கும் உள்ள வேறுபாடுகள், நோயாளியின் மன உணர்வுகளுக்கு ஏற்ப மாறுபடும் சிகிச்சை முறைகள் என ஹோமியோபதி மருத்துவம் சார்ந்த அனைத்து விஷயங்களையும் இந்நூல் விளக்குகிறது.
ஹனிமன் எழுதிய மூல நூல்களின் பல பதிப்புகளுக்கு அவர் எழுதிய முகவுரைகளும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
மாற்று மருத்துவமுறைகளின் பக்கம் மக்கள் கவனம் திரும்பியுள்ள இக்காலத்தில் இந்நூல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமணி, 17/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818