ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்
ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள், பி.சாய்நாத், தமிழில்: ஆர்.செம்மலர், பாரதி புத்தகாலயம் வெளியீடு, விலை: ரூ.550.
இந்தியாவில் கிராமப்புறச் செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவற்றுக்குத் தனிக் கவனத்தை உருவாக்கிய மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்தின் பிரபலமான புத்தகம் இது. விவசாயிகளின் பிரச்சினைகள், கிராமப்புறங்களில் நிலவும் கல்வி, சுகாதாரச் சிக்கல்கள், அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் தோல்விக்குக் காரணங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு இது.
வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் பனையேறும் தொழிலாளர்களின் பரிதாபகரமான வாழ்க்கை, இடைத்தரகர்களால் விவசாயிகளின் வருமான இழப்பு, சாராயம் காய்ச்சுபவர்களின் ஒரு நாள் வாழ்க்கை ஆகியவற்றுடன் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சைக்குப் புலம்பெயரும் விவசாயத் தொழிலாளர்களைக் குறித்த உயிரோட்டமான சித்திரங்கள் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
நன்றி: தமிழ் இந்து,.6/3/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031274_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818