ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ, அதுல்ய மிஸ்ரா, ரூபா வெளியீடு, விலை: ரூ.295
சேலத்தில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் போஸ், ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்று மணிப்பூர் மாநிலத்தில் பணியாற்றுகிறார். மணிப்பூர்-மியான்மர் எல்லைப் பகுதியில் மோரே என்ற சிற்றூரில் அன்றைய பர்மாவிலிருந்து வந்து குடியேறிய தமிழ் அகதிகள் பெருமளவில் வசித்துவருகின்றனர்.
திருமணமாகாத ‘தாத்தா’ என்று அழைக்கப்பட்டுவரும் தமிழர் ஒருவர், தொடர்ந்து செடிகளை வளர்த்து பொட்டல் காடுகளை உருமாற்றுகிறார். இவரைச் சந்தித்த பிறகு அந்த அதிகாரியிடம் ஏற்பட்ட மனமாற்றம் எத்தகைய மாற்றத்தை உருவாக்கியது என்பதை நாவலாக்கியிருக்கிறார் தமிழக ஐஏஎஸ் அதிகாரியான அதுல்ய மிஸ்ரா.
சுற்றுச்சூழல் குறித்து அக்கறை கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நாவல் இது.
– வீ.பா.கணேசன்
நன்றி: தமிழ் இந்து, 20/1/2020.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789351350194.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818