படித்த வேலையா? பிடித்த வேலையா?

படித்த வேலையா? பிடித்த வேலையா? , காம்கேர் கே.புவனேஸ்வரி, தாமரை பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்,  பக்.196, விலை ரூ.145.

நூலாசிரியர் கணினித் துறையில் தான் சந்தித்த சவால்கள் குறித்தும், கணினி உள்பட பல்வேறு துறைகளில் இன்றைய இளம் தலைமுறையிருக்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் இந்நூலில் எழுதியிருக்கிறார்.

ஐ.டி. துறை இளைஞர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை குறைப்பதற்கான வழிமுறைகள், இணையதள வங்கி செயல்பாடுகள், கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு, பெண் நிர்வாகிகளின் கீழ் பணிபுரியும் பெண்கள் மனநிலை மாறுமா என 20 அத்தியாயங்களில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள.

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிவோர் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது ஒரே நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும்; முகநூல், சுட்டுரை போன்ற சமூக வலைதளங்கள் மது, சிகரெட்டுக்கு இணையாக போதை ஏற்றுபவை, அதில் மூழ்கிவிட்டால் மீண்டெழுவது கடினம்; வார விடுமுறைகளை அலுவலக நண்பர்களுக்காக அல்லாமல் குடும்ப உறுப்பினர்களுக்காக செலவிடுங்கள் போன்ற அறிவுறுத்தல்கள் பயனுள்ளவை.

இந்தக் கால கட்டத்தில் படித்த படிப்புக்குப் பொருத்தமான வேலையைப் பார் என்றும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. எதில் திறமை அதிகம் வெளிப்படுகிறதோ, அந்தத் துறையில் பிரகாசிப்பது தவறில்லை. செய்யும் வேலையை விரும்பிச் செய்ய வேண்டும். பிடிக்காத வேலையை விட்டு வெளியேறும் மன தைரியம் வேண்டும் என்ற நூலாசிரியரின் அறிவுரைகள் பயனுள்ளவை. இது ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, இளம் தலைமுறையினர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நன்றி: தினமணி, 23/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *