பையன் கதைகள்
பையன் கதைகள், வி.கெ.என்., தமிழில் மா. கலைச்செல்வன், சாகித்ய அகாதெமி, பக். 752, விலை 365ரூ.
சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்த படைப்பில் “பையன்’ என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு புனையப்பட்ட 73 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
மலையாள இலக்கியத்தில் நகைச்சுவை சக்கரவர்த்தி என்று போற்றப்படும் வடக்கேக் கூட்டாலெ நாராயணன்குட்டி நாயர் (வி.கெ.என்.) இக்கதைகளில் பல்வேறு துறைகளில் ஊடுருவியுள்ள குற்றம் குறைகளை அங்கதச் சுவை மிளிர அழகுற எடுத்துக் காட்டியுள்ளார்.
இலக்கியம், அரசியல் என கதைக்கு கதைக்கு வித்தியாசமானகளனைக் எடுத்துக் கொண்டு சமூக அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.
திக்விஜயம்,வியாபாரம், ஊ, தோசை, தேங்காய், கருப்புப் பணம், மூன்றாவதும் காக்கை, செளந்தர்யலஹரி என்று இத்தொகுப்பில் படிக்கவும், சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டும்படியாக உள்ள கதைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
சிறப்பான கட்டமைப்பில் வெளியாகியுள்ள இந்த படைப்பு மூலச் சுவை குன்றாதும் வாசிப்பின் விறுவிறுப்பு எங்கும் குறையாதும் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
நன்றி: தினமணி, 28/11/2016.