புகழ் மணக்கும் அத்தி வரதர்

புகழ் மணக்கும் அத்தி வரதர், க.ஸ்ரீதரன், நர்மதா வெளியீடு, விலை: ரூ.60

முக்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதனில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அனந்தசரஸ் என்ற திருக்குளத்திலிருந்து எழுந்தருளும் அத்திமர வரதர் வைபவத்தையொட்டி நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம்.

காஞ்சிபுரத்தின் பெருமை, அவதார வரலாறு, சரஸ்வதி வேகவதியாக வந்த கதை, கோயிலின் அமைப்பு, உற்சவங்கள், காஞ்சியுடன் தொடர்புள்ள ஆசார்யர்கள், திவ்யப் பிரபந்தத்தில் காஞ்சி தொடர்பான பாசுரங்கள், திருக்கச்சி நம்பிகள் அருளிய தேவராஜ அஷ்டகம், கூரத்தாழ்வானின் வரதராஜ ஸ்தவம், மஹா தேசிகன் அருளிய மெய்விரத மான்மியம், அடைக்கலப்பத்து, திருச்சின்னமலை, அருத்த பஞ்சகம், மணவாள மாமுனிகள் அருளிய ஸ்லோக மாலிகை என்று எதுவும் விடுபடாமல் தொகுக்கப்பட்ட நூல். அத்திகிரியாரை சேவிக்க வரிசையில் நிற்கும்போது படிக்கவும், தினசரி பாராயணம் செய்யவும் உகந்தது.

– ஜூரி

நன்றி: தமிழ் இந்து, 13/7/19

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *