பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு,  பதிப்பாசிரியர்: ப.முருகன், வெளியீடு: தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லூரி, பக்.644, விலை ரூ.300.

“தமிழ் இலக்கிய வரலாறு’ குறித்து இதுவரை 90க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தொடர்ந்து “தமிழ் இலக்கிய வரலாறு’ எழுதப்பட்டு வருகிறது.

கா.சு.பிள்ளைதான் முதன்முறையாக தமிழ் இலக்கிய வரலாற்றை முழுவதும் எழுதினார் (1930). இவருக்குப் பின்னர் மு.வரதராசனார், சி.பாலசுப்பிரமணியன், பூவண்ணன், மது.ச.விமலானந்தம், மு.அருணாசலமும் போன்றோர் எழுதியுள்ளனர்.

இவர்கள் தவிர, “புதிய நோக்கில்’ தமிழண்ணலும், “வகைமை’ நோக்கில் பாக்கியமேரியும், “வினா-விடை’ நோக்கில் இரா.விஜயனும், “எளிய முறையில்’ ஆறு அழகப்பனும், “புதுப் பார்வை’யில் தி.அரங்கநாதனும், “பன்முக’ நோக்கில் கா.வாசுதேவனும், “புதிய வெளிச்ச’த்தில் க.பஞ்சாங்கமும், “சமூகவியல்’ நோக்கில் அந்தோணி ராசுவும் எழுதியுள்ளனர். அந்த வரிசையில், தற்போது “பொருண்மை’ நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது.

சங்ககால இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியங்கள் வரையிலான அனைத்தையும் பொருண்மை நோக்கில் சொல்லியிருப்பது புது முயற்சி மட்டுமல்ல, தனிச்சிறப்பும் கூட.

சங்க இலக்கியம், சமய இலக்கியம், சிற்றிலக்கியம், நீதி இலக்கியம், இலக்கண நூல்கள், உரையாசிரியர்கள், தற்கால இலக்கியம், கணினித் தமிழ், அயலகத் தமிழ், நாடகத் தமிழ், தொல்லியல், தமிழ் இசை இலக்கியம், ஊடகத் தமிழ், அறிவியல் தமிழ், இணைய தமிழ் என அனைத்தையும் பதிவு செய்திருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாறு குறித்து இதுவரை வெளியான நூல்கள் குறித்த தகவல்கள்; சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்கள், ஆசிரியர்கள் போன்ற தகவல்களும் பிற்சேர்க்கையில் தரப்பட்டுள்ளன.

நன்றி: தினமணி,20/9/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *