பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம், மயிலன் ஜி சின்னப்பன், உயிர்மை பதிப்பகம், விலை: ரூ.250
இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவரும், மூளை-தண்டுவட அறுவைச்சிகிச்சை மருத்துவருமான மயிலன் ஜி சின்னப்பன் எழுதியிருக்கும் மருத்துவத் துறை சார்ந்த நாவல் இது. இளம் மருத்துவர் ஒருவரின் தற்கொலையில் தொடங்குகிறது இந்த நாவல். அந்த இறப்பைப் பற்றி மருத்துவத் துறையின் வெவ்வேறு படிநிலைகளில் பணிபுரியும் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரான இந்தக் கதைகளால் துப்பறியும் நாவலுக்கான பாணியை இந்நாவல் பெற்றுவிடுகிறது. அந்த மர்மத் தன்மையினூடாக மருத்துவத் துறையின் வெவ்வேறு முகங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. குறிப்பாக, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மிக அதிக அளவில் விவாதிக்கப்படுகின்றன.
துப்பறியும் பகுதிக்குக் கொடுக்கப்பட்ட அதீத கவனத்தைக் குறைத்துக்கொண்டு மருத்துவத் துறை சார்ந்த அக்கறைகளில் அதிக கவனம் காட்டியிருக்கலாம். பொதுமக்களுக்கு மிகவும் தொடர்புடைய மருத்துவத் துறையின் மர்மம் நிறைந்த பக்கங்களைப் பொது கவனத்துக்குக் கொண்டுவந்து விவாதமாக்கியிருக்கும் இந்நாவல், சென்னைப் புத்தகக்காட்சியில் விற்பனையிலும் களைகட்டியது.
நன்றி: தமிழ் இந்து, 15-2-2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818