புலம்பெயர்ந்தோர் கவிதையும் வலியும்
புலம்பெயர்ந்தோர் கவிதையும், வலியும், ஈழபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக்.72, விலை ரூ.80.
இலங்கையின் இனப் பிரச்னை காரணமாக தமிழர்கள்அந்நாட்டை விட்டு புலம் பெயரும் நிகழ்ச்சி நீண்டகாலமாக நடந்து வருகிறது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான தமிழ் மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். இடம் பெயர்ந்த மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை.
தமிழக அகதி முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், குடியமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்கள் படும் சிரமங்களை இந்நூல் விவரிக்கிறது. அகதி முகாம்களில் உள்ள பெண்களை வல்லுறவுக்குள்ளாக்குவது எல்லா நாடுகளிலும் அரங்கேறும் கொடுமையாக உள்ளது.
ஈழத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இங்கே ஓடி வந்தோம். இங்கு உயிர் மட்டும் மிஞ்சி நிற்கும் மனநோயாளியாக மாற்றப்பட்டுவிட்டோம் என்று புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கூறும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இவ்வாறு இந்நூல் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களின் துன்பங்கள் பேசப்படுகின்றன. அந்தத் துன்பங்களில் இருந்து பிறந்த கவிதைகளையும் எடுத்துக் காட்டுகிறது.
முடி சூடிய தமிழனம் முள்வேலி கம்பிக்குள் இருக்கும் அவலத்தை வாசிக்கும்போது மனதில் வலி ஏற்படுகிறது.
நன்றி: தினமணி,9/7/2018
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026931.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818