சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி
சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி (ராஜாஜி 143-ஆவது பிறந்த நாள் வெளியீடு), ரெ.தே.பெ.சுப்ரமணியன், பக்.80, விலை குறிப்பிடப்படவில்லை.
‘இந்தியத் தலைவர்களிலேயே அதிகம் தவறாக அறியப்பட்டவர் ராஜாஜி’ என காந்தியடிகளே கூறுமளவுக்கு ராஜாஜிக்கு எதிரான அவதூறுகள் வலுப்பெற்றிருந்தன.
ராஜாஜியின் கல்விக் கொள்கையை ‘குலக் கல்வித் திட்டம்’ என அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரசாரங்கள் வலிமையுடன் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்தக் கல்வித் திட்ட வரைவில் எங்கேயும் அப்படிப்பட்ட உணர்வு இல்லை என்பதே உண்மை. எத்தொழிலும் இழிவானதல்ல என்ற எண்ணத்தை சமுதாயத்தில் விதைக்க வேண்டும் என்று நினைத்த ராஜாஜிக்கு கிடைத்தது அவப்பெயர் மட்டுமே.
திருச்செங்கோடு ஆசிரமத்தில் தோல் பதனிடும் தொழிலை ராஜாஜி கற்றுக் கொண்டார். செருப்பு தைக்க கற்றுக் கொண்டார். தன் காலணிகளை தானே செப்பனிடவும் செய்தார்.
ஜமீன் ஒழிப்புச் சட்டம், ஆலயப் பிரவேசச் சட்டம் இயற்றப்பட்டதில் ராஜாஜியின் பங்கு கணிசமானது. பிற்காலத்தில் அரசு லாட்டரி விற்பனை, மதுக்கடை திறப்பு ஆகியவை குறித்து மிகுந்த மனவேதனை அடைந்தார்.
காந்தி, நேரு மீது ராஜாஜி மிகுந்த மரியாதை வைத்திருந்தபோதிலும் தயங்காமல் அவர்களை விமர்சனமும் செய்தார். இந்திரா காந்தியும் இதற்கு விதிவிலக்கல்ல. தன்னை விமர்சனம் செய்த பெரியாரை ‘அன்பார்ந்த எதிரி’யாகவே கருதினார்.
ராஜாஜி குறித்த அவதூறுகளை மறுக்கும் விதத்திலும், இளைய தலைமுறையினர் ஊக்கம் பெற்று உண்மைகளை உணர்ந்து கொள்ளவும் இந்நூல் வழிகோலுகிறது.
நன்றி: தினமணி, 28/2/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818