ஸம்ஸ்கிருத முதற் புத்தகம்
ஸம்ஸ்கிருத முதற் புத்தகம், ஸர் ரா.கோ. பண்டார்கர், தமிழில்: பென்னாத்தூர் சு.ஜானகிராமையர்,சரஸ்வதி பதிப்பகம், பக்.300, விலை ரூ.150.
எளிய முறையில் சம்ஸ்க்ருதம் பயில்வதற்காக, புகழ் பெற்ற சம்ஸ்க்ருத அறிஞரான ஆர்.ஜி.பண்டார்கர் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். இதன் முதல் பதிப்பு 1918-இல் வெளியானது. இதன் அடுத்த பதிப்பு குறித்து 1921-ஆம் ஆண்டில் சுதேசமித்திரனில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் இல்லாமல், எளிய முறையில், வீட்டில் இருந்தபடியே இந்தப் புத்தகத்தின் உதவியுடன் சம்ஸ்க்ருதம் பயிலலாம். சம்ஸ்க்ருத எழுத்துகள் தொடங்கி, எளிமையான இலக்கணங்கள் வரை பல சிறு பாடங்களாகப் பிரித்து அந்த மொழியைப் பரிச்சயப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.
அ முதற்கொண்டு எல்லா சம்ஸ்க்ருத எழுத்துகளையும், கூட்டு எழுத்துகளையும் பரிச்சயப்படுத்துகிறார் நூலாசிரியர். தொடர்ந்து சிறிய அளவிலான சுலபமான பாடங்கள், பயிற்சி வினாக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அடுத்தடுத்த சில ஆண்டுகளிலேயே மூன்று பதிப்புகள் வெளியானதிலிருந்தே, அக்காலத்தில் இந்த நூல் பெற்ற வரவேற்பைப் புரிந்து கொள்ளலாம். தற்போதைய தலைமுறையினருக்காக இப்போது ஒளியச்சுப் பிரதி வடிவில் பெ.சு.மணி இந்த நூலின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளார். நூலின் மொழிபெயர்ப்பாளர், பெ.சு.மணியின் தந்தையின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: தினமணி, 30/4/2018.