சான்றுச் சட்டவியல்

சான்றுச் சட்டவியல், தி.வ.தெய்வசிகாமணி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், பக். 544, விலை ரூ.500.

சான்று சட்டத்தின் முக்கியத்துவத்தை நூலாசிரியர் தெசிணி விரிவாக, எளிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கிறார். இதுமட்டுமின்றி, பொருண்மைகள் (உண்மைகள்), சான்றுரைஞர்கள், ஆவணச் சான்றுகளின் வழிநின்று, அதனை மெய்ப்பிப்பதற்கான நடைமுறைகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் விதிவிலக்குகளும் இடம்பெற்றுள்ளன.

வாய்மொழிச்சான்றே முக்கியம் என திரைப்படத்தின் மூலம் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட ஒரு நம்பிக்கை கண்ணாடியைப் போல் நொறுங்குகிறது. வாய்மொழிச்சான்று கூறுபவரின் நடத்தை உள்ளிட்டவற்றை உற்று நோக்கிய பிறகே அதன் உண்மைத் தன்மையை உணர முடியும் என்பது அருமையான விளக்கம்.

இதற்கிடையே வாதியின் மெய்ப்பிக்கும் பொறுப்பு குறித்தும் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொருண்மையைத் தகுந்த சான்றுடன் மெய்ப்பிப்பதில் இருந்து சிறிதளவு இடர நேர்ந்தாலும், அது எதிர் தரப்புக்கு சாதகமாகக் கூடும். நீதிபதிகளின் அதிகார வரம்பு, நீதிபதி விலக்கிக் கொள்வதற்கான ஆவணங்கள் குறித்த விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இத்துடன் இறுதியாக நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள வழக்குகளின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. நீதிமன்ற வாசல் ஏறும் நிலையோ அல்லது அங்கு நீதியைத் தேடிச் செல்லும் நெருங்கியவருக்கு உதவ இந்தப் புத்தகம் நிச்சயம் கை கொடுக்கும்.


நன்றி: தினமணி, 25/4/22

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033254_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *