ஷிா்டி பாபா
ஷிா்டி பாபா, திருப்பூா் கிருஷ்ணன், திருப்பூா் குமரன் பதிப்பகம், பக்.136, விலை ரூ.150.
மகான்களின் வரலாற்றை எழுதும்போது அவா்கள் நிகழ்த்திய அற்புதங்களை எழுதுவதைத் தவிா்க்க இயலாது. பல மகான்களின் வரலாறே அற்புதங்களின் தொகுப்புதானே’ என்று வியந்து நூலைத் தொடங்கும் திருப்பூா் கிருஷ்ணன், ஷிா்டி பாபா நிகழ்த்திய பல அற்புதங்களை இந்நூலில் விரித்துரைத்துள்ளாா்.
அவற்றுள், பலரும் அறியாத ஒன்றுதான் போண்டா பொட்டலத்தின் நூலை இரண்டு தென்னை மரங்களின் இடையே கட்டிவிட்டு அந்த நூலில் பாபா படுத்துறங்கியது.
அதேபோல, பாபாவை சுதந்திரப் போராட்டத் தியாகி பால கங்காதர திலகா் சந்தித்தாா் என்பது பலரும் அறியாத ரசகியம்.
பாபா திலகா் சந்திப்பு பற்றி ஓரளவு அறிய முடிகிறதேயன்றி முழுமையான விவரங்கள் கிட்டவில்லை. அப்போது நடந்தது பிரிட்டிஷ் அரசாங்கமாதலால், பாபாவும் திலகரும் பேசிய பேச்சின் விவரங்கள் மிக ரகசியமாகப் பாதுகாப்பட்டதே காரணம்’ என்று கூறும் நூலாசிரியா், இவ்விருவருக்குமான சந்திப்பு, உரையாடல் குறித்து ‘பாபாவை சந்தித்தாா் திலகா்’ என்ற கட்டுரையில் விவரிக்கிறாா்.
பக்தி என்னும் எண்ணெய் ஊற்றி அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞானம் என்னும் சுடரை எரியச் செய்பவா்கள் அல்லவா மகான்கள்?’ என்ற கேள்வியை எழுப்பி, அருட்பிரகாச வள்ளலாா் போலவே பாபாவும் தண்ணீரில் விளக்கெரித்த அற்புத நிகழ்வைப் பதிவு செய்திருக்கிறாா்.
அனைத்தும் அறிந்த ஆண்டவன்’ என்கிற ஒரே தலைப்பில் இரு வேறு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. பாபாவின் புகழ் பேசும் முத்து முத்தான 26 கட்டுரைகளின் மூலம் பக்கத்துக்குப் பக்கம் பாபா நிகழ்த்திய அற்புதங்கள் மெய்சிலிரிக்க வைக்கின்றன.
நன்றி: தினமணி, 14/12/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818