சிறார்களுக்கான அறிவியல்
சிறார்களுக்கான அறிவியல்,சயின்ஸ் விக்னெட்ஸ், ஜந்தர் மந்தர்,சயின்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.110.
சிறுவயதில் இருந்தே அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ‘துளிர்’ என்ற மாத இதழின் மூலம் 1987முதல் தமிழகச் சிறார்களுக்கு பெரும் சேவையாற்றிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆங்கிலம் வழி பயிலும் மாணவர்களையும் கணக்கில்கொண்டு 1993-ல் ‘ஜந்தர் மந்தர்’ என்ற ஆங்கில மாத இதழும் வெளிவரத் தொடங்கியது. அவ்விதழின் வெள்ளிவிழாவை ஒட்டி வெளியாகியுள்ள இச்சிறப்பு மலர் பொது அறிவு கேள்வி-பதில், வேதியியல், புவியியல், வானியல் என அறிவியலின் பல்வேறு புதிர்களை அவிழ்க்கும் கட்டுரைகளைக் கொண்டது. 1993 முதல் 2005 வரை ‘ஜந்தர் மந்தர்’ இதழில் வெளியான சிறப்புக் கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அறிவியலின் அடிப்படை நோக்கமான கேள்விகளை எழுப்பும் பண்பைச் சிறார்களிடம் அதிகரிக்கும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது.
– வீ.பா.கணேசன்.
நன்றி: தமிழ் இந்து, 21.12.2019
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818