சொன்னால் நம்ப மாட்டீர்கள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, குமரன் பதிப்பகம், பக். 240, விலை 90ரூ.

1920 இல் பிறந்த நூலாசிரியர், தனது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை இந்நூலில் சொல்லியிருக்கிறார். நூலின் தலைப்புக்கேற்ப இந்நூலில் இடம் பெற்றுள்ள பல சம்பவங்கள் அமைந்திருக்கின்றன.

மிகச் சிறுவயதில் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நூலாசிரியர், ராஜாஜி, கல்கி ஆகியோரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்.

பத்துவயதிருக்கும்போது காந்தியை நேரில் பார்த்து, காந்தி தந்த ஆப்பிளைச் சுவைத்தது, சத்தியமூர்த்தியின் அறிவுரையைக் கேட்டு கதர் அணிய ஆரம்பித்தது, 10 பேர் கலந்து கொண்ட முதல் காங்கிரஸ் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் பேசி, காவல்துறையினரிடம் அடி வாங்கியது, சிதம்பரத்தைப் போலவே தேவகோட்டையில் தமிழிசை மாநாட்டை நடத்தியது, தனது 22 ஆம் வயதில் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதால் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திருவாடனைச் சிறையில் அடைக்கப்பட்டது, சிறையில் அடைக்கப்பட்ட அவரை, இந்தியாவில் வேறு எங்கும் நிகழாத ஒரு நிகழ்வாக, பொதுமக்கள் சிறையை உடைத்து அவரை வெளிக்கொண்டு வந்தது, தமிழ்ப்பண்ணை பதிப்பகத்தைத் தொடங்கி பல நூல்களைப் பிரசுரம் செய்தது, வடக்கு எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றது, திரைப்படத் தயாரிப்பாளரானது, நடிகை சரோஜாதேவியை திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது, பெரியாருடன் பழகியது, ம.பொ.சி.யுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டது, காமராஜருக்கு நெருக்கமானவராக இருந்தது என நூலாசிரியர் சொல்லும் பல நிகழ்வுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
சின்ன அண்ணாமலையின் சேவை மனப்பான்மையும், அவருக்கிருந்த மக்கள் ஆதரவும் இன்றைய அரசியல் கட்சியினர் பலரும் அறிய வேண்டியவை.

நன்றி: தினமணி, 16/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *