தி பேர்ல் கனபி
தி பேர்ல் கனபி – ஆங்கிலம், கே.பரமசிவம், ஆசியவியல் நிறுவனம், விலைரூ.500. சங்க காலத்துக்குப் பின், பெரிதும் அறியப்படாத தொகுப்பாக விளங்குவது பாண்டிக்கோவை; 325 பாடல்களின் திரட்டு. அகம், புறம் கலந்த எதுகை சிறப்பமைந்த அழகிய பாக்களை உள்ளடக்கியவை. இனிமையான நான்கடி செய்யுள்களைக் கொண்டது. தலைவனும், தலைவியும் கொண்ட காதல் வேட்கையின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி வீரத்தையும் பின்னிய பாடல்கள் படிக்க இதமானவை. எளிமையான ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலக்கியச் செழுமை, இலக்கணப் புனைவுகளை உள்வாங்கி கருத்துக்குப் பொருந்தக்கூடிய சொற்களைத் தேர்ந்து, தமிழ்ப் பண்பாட்டுக் […]
Read more