சாமானியனுக்கான சட்டங்கள்

சாமானியனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 90ரூ. ஒருவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையென்றாலும், எந்தவிதமான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும், காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. அப்படிச் செல்கிற ஒருவருக்கு நடப்பிலுள்ள சட்டங்களைப் பற்றியும், காவல்துறையின் நடவடிக்கைகளைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றால், அவருடைய மனதில் பயம் புகுந்து கொள்வதோடு, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அலைய நேரிடுகிறது. இந்தக் குறையைப் போக்கும்விதமாக சாமானிய மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச சட்ட அறிவை இந்நூல் புகட்டுகிறது. […]

Read more