சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, வழக்கறிஞர் த. ராமலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 130ரூ. சிந்தனையில் தெளிவும், சிந்தனையில் ஆழமும் மானுட வளர்ச்சிக்கெல்லாம் மூல ஆதாரம்; தெளிவான சிந்தனையில் தான் ஆழமான சிந்தனைகள் தோன்றுகின்றன. உயர்ந்த சிந்தனைகளே நம்மை உயரத்துக்குக் கொண்டு செல்கின்றன. யாரும் சிந்திக்காத கோணத்தில் சிந்தித்த நியூட்டன், காந்தியடிகள், அம்பேத்கர், ஈ.வெ.ரா., காமராஜர் போன்றோர் வரலாறு படைத்துள்ளனர். நம் சிந்தனைகளையே உளியாகக் கொண்டு நம்மை செதுக்கும்போது, நம்மிடம் உள்ள தேவையற்றவை கழிந்து போகின்றன. உள்ளே மறைந்து கிடக்கும் நம் திறமைகள் […]

Read more

சாமானியனுக்கான சட்டங்கள்

சாமானியனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 90ரூ. ஒருவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையென்றாலும், எந்தவிதமான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும், காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. அப்படிச் செல்கிற ஒருவருக்கு நடப்பிலுள்ள சட்டங்களைப் பற்றியும், காவல்துறையின் நடவடிக்கைகளைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றால், அவருடைய மனதில் பயம் புகுந்து கொள்வதோடு, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அலைய நேரிடுகிறது. இந்தக் குறையைப் போக்கும்விதமாக சாமானிய மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச சட்ட அறிவை இந்நூல் புகட்டுகிறது. […]

Read more

சாமானுயனுக்கான சட்டங்கள்

சாமானுயனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 90ரூ. சிக்கல்களிலிருந்து விடுபட, சிக்கல்களை எதிர்கொள்ள சாமானியன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும், அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல். நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றுள் ஏதோ ஒரு வேலையாக நுழைபவர்களுக்கு, சில சட்ட நிலைகள் மற்றும் நடைமுறைகள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம். பிணை, விசாரணை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், காவல் துறையின் கடமை, சிறைச்சாலையில் கைதிகள் வைக்கப்பட வேண்டிய முறைகள், நீதிமன்றத்தில் சாமானியன் […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், சென்னை, பக். 224, விலை 100ரூ. நூலின் தலைப்பே நம்மைப் படிக்கத் தூண்டுகிறது எனலாம். நாடறிந்த வழக்கறிஞர் நூலின் ஆசிரியர். சிறந்த பேச்சாளரான நூலாசிரியர், ஏற்கனவே பல சுயசிந்தனை நூல்களை எழுதியுள்ளார். இந்நூலும் நம் சிந்தனையைத் தூண்டி, நல்லறிவு பெறவைக்கிறது. 50 தலைப்புகளில் நூலாசிரியர் தம் எண்ணச் சிறகுகளை விரித்துள்ளார். அத்தனையும் படிப்போர்க்கு, இனிக்கும் என்றே கூறலாம். திருக்குறள், கம்பராமாயணம், திரிகடுகம், பழமொழி நானூறு என, பல நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நூலாசிரியர் […]

Read more

தமிழ்நாட்டுப் பறவைகள்

தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், விலை 300ரூ. அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நமது வாழ்வில், அழகான பறவைகள் பற்றி அறிய இந்த நூல் உதவிடும். பைனாகுலர் கையில் இருந்தால் தூரத்தில் உள்ள பறவைகளையும் பார்த்து மகிழலாம். ஆனால் அதன் வண்ணம், சிறகுகளின் சிறப்பு, அலகுகள், அதன் பெயர், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கின்றனர். தமிழகத்தில் எங்கே அவைகளை காணலாம் என்ற பல கேள்விகளுக்கு விடை […]

Read more