தமிழ்நாட்டுப் பறவைகள்
தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் க. ரத்னம், மெய்யப்பன் பதிப்பகம், விலை 300ரூ.
அழியா அழகான இயற்கைக்கு அணி சேர்ப்பது பறவையினம். மொபைல் டவர் பாதிப்பால், சிட்டுக்குருவிகள் காணாமல் போனதாக பேசுகிறோம். சுற்றுச்சூழலை பாழ்படுத்தும் நமது வாழ்வில், அழகான பறவைகள் பற்றி அறிய இந்த நூல் உதவிடும். பைனாகுலர் கையில் இருந்தால் தூரத்தில் உள்ள பறவைகளையும் பார்த்து மகிழலாம். ஆனால் அதன் வண்ணம், சிறகுகளின் சிறப்பு, அலகுகள், அதன் பெயர், ஆங்கிலத்தில் எப்படி அழைக்கின்றனர். தமிழகத்தில் எங்கே அவைகளை காணலாம் என்ற பல கேள்விகளுக்கு விடை தருவது இந்த நூலின் சிறப்பாகும். பறவையின் வண்ணப்படத்துடன், இத்தகவல்களும், வழுவழு தாளில் வண்ணக் கலவையுடன் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் முயற்சி பாராட்டுதற்குரியது. பதினொரு ஆண்டுகளுக்கு பின், இரண்டாம் பதிப்பாக நூல் அமைந்த போதும், இன்றைய இளைய தலைமுறையினர் இந்த நூலை ஆர்வத்துடன் வாங்கி பயனடையலாம். -பாண்டியன்.
—-
வெற்றி வெளியே இல்லை, வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், பக். 224, விலை 100ரூ.
வெற்றி என்பது வெளியே எங்கும் இல்லை. அது நமக்குள்ளே, விதைக்குள்ளே மிகப் பெரிய மரம் உறங்கிக் கொண்டு இருப்பதைப்போல் இருக்கிறது. நமது முயற்சியும், உற்சாகமும், உழைப்பும், ஊக்கமுமே அந்த விருட்சத்தை வெளிப்படுத்த வல்லவை. இந்தக் கருத்தைப் பல்வேறு எடுத்துக்காட்டுடன் உறுதியாக நிறுவுகிறார் ஆசிரியர். வாழ்வில் ஏற்றம் பெற விரும்புவோர் தவற விட்டுவிடக்கூடாத நூல் இது. -மயிலை சிவா. நன்றி: தினமலர், 19/1/14.