குப்பை உலகம்
குப்பை உலகம், சேவ் (Save), 5, அய்ஸ்வர்யா நகர், கே.பி.என்.காலனி, திருப்பூர், பக். 96, விலை 50ரூ.
சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருப்பூர் சுற்றுச்சூழல், தொழிலாளர் பிரச்னைகள் குறித்தும் நூலின் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சாயப்பட்டறைகளாலும், மின் குப்பைகளாலும் நெகிழி குப்பைகளாலும், நியூட்ரினோ ஆய்வுகளினாலும் இந்த உலகம் எவ்வளவு குப்பைக்காடாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது என்பதை அதன் தீவிரம் குறையாமல் எச்சரிக்கும் கட்டுரைகள் அதிகம். மனிதனின் நாகரீக வளர்ச்சி இயற்கை மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராக வாதாடுகிறது இந்நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/1/2014.
—-
அழகுக் குறிப்புகள், கண்ணப்பன் பதிப்பகம், 4/20, திருவள்ளுவர் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 40ரூ.
மனிதனுக்கு உடல்நலம், மனநலம் மிகவும் முக்கியம். இதில் உடல்நலம் பேணிப்பாதுகாத்திட அருமையான ஆலோசனைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ரசாயனம் இல்லாத இயற்கை பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் நூலாசிரியர் எஸ். லீலா. உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உணவுமுறை, உண்ணும்முறை, தவிர்க்க வேண்டிய உணவுகள் என அனைத்து ஆலோசனைகளும் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 2/1/2014.