க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா.சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், ச. கந்தசாமி, சாகித்திய அகாடெமி, விலை 200ரூ. க.நா.சுப்ரமண்யத்தை விமர்சகராகவும் நாவலாசிரியராகவுமே பரவலாக அறிந்திருக்கிறோம். க.நா.சு.வின் சிறுகதை சாதனைகளை வாசிக்கத் தோதாக அவரது 24 சிறுகதைகளை ச.கந்தசாமி தொகுத்திருக்கிறார். க.நா.சு. ஒரு காலகட்டத்தில் இருந்த விழுமியங்களின் பிரதிநிதி. அவர் தன் காலத்தின் குரலாக அவர் வாழ்ந்த சூழ்நிலையையே சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். ஆழ்மன வேட்கையை, அக்காலகட்டக் குடும்பநிலையை, இயல்பான வாழ்க்கையை அவரது சிறுகதைகளில் காணலாம்.   அவருடைய கதைகள் பெரும்பாலும் குடும்ப அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு அதன் மீது கட்டப்பட்டவைதான். […]

Read more