நகுலன் கதைகள்
நகுலன் கதைகள், தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா, பக்.349, விலை ரூ.350. ஐந்து குறு நாவல்கள், 32 சிறுகதைகள், இரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் என 1959 முதல் 1995 வரை கணையாழி உள்பட பல்வேறு இதழ்களில் வெளியான நகுலனின் 39 கதைகளின் தொகுப்பு இது. சில கதைகள் விடுபட்டுள்ளன. யதார்த்த நிகழ்வுகளை காட்சிப்படுத்தி தேவைக்குத் தக்க சில இடங்களில் புனைவை சேர்த்து இரண்டையும் வாசகரால் பிரித்தறிய முடியாதவாறு ஒவ்வொரு கதைகளும் உள்ளன. சிறுகதைகளில் வர்ணனைகளை மிகவும் மட்டுப்படுத்தி ஓரிரு நிமிடங்களில் கதைகள் முற்றுப் பெறுகின்றன. […]
Read more