நந்திபுரத்து நாயகன்

நந்திபுரத்து நாயகன், டி.கே. இரவீந்திரன்,  விகடன் பிரசுரம், விலை 330ரூ. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனை மையமாகக் கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் கங்க மன்னனுடன் சேர்ந்து போர் நடத்தி, போர் தர்மத்தைப் புறந்தள்ளி நந்திவர்மனைத் தோற்கடித்தான். போர்க்களத்தில் தப்பிய நந்திவர்மன் இரண்டு ஆண்டுகள் கழித்து சாளுக்கியர்களுடன் போரிட்டு வென்று மீண்டும் ஆட்சி பீடம் ஏறினான். இந்தக் கருவை மையமாகக் கொண்டு நந்திவர்மனுடன் சில கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து விறுவிறுப்பான நாவலைப் படைத்துள்ளார் டி.கே. இரவீந்திரன். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.

Read more